அருமை நண்பர்களே!!!
இசைஞானியுடன் ஒரு இசைப்பயணம் என்னும் அபூர்வமான ஒரு நேர்காணலை இசையருவி சேனலில் இயக்குனர் மிஷ்கின் ஏற்பாடு செதிருந்தார்.மனதுக்குள் ஆனந்தப் பேரலைகளை ,மிகவும் தோற்றுவித்த ஒரு நிகழ்ச்சி அது என்பேன். நான் நந்தலாலா படத்தை சென்னைக்கு விரைவில் வந்து பார்க்க இருக்கிறேன்.நிச்சயம் அதன் பாதிப்பை நடுக்கத்துடனாவது பதிவு செய்வேன். இந்த நிகழ்ச்சி பார்க்கையிலேயே, படத்தை எப்படியும் பார்த்துவிடவேண்டும், என்ற ஆவல் ஒருவருக்கு எழுவது திண்ணம்.
இதே நிகழ்ச்சியின் இறுதிப்பகுதியில், இசைஞானி உருவாக்கித் தந்த ஐந்து பாடல்களில் மூன்றினை படத்தில் உபயோகப்படுத்தாததற்கு இளையராஜாவிடமும், அவர் ரசிகர்களிடமும் மனப்பூர்வமாக மன்னிப்புக்கேட்டார் மிஷ்கின், அந்த பாங்கு மிகவும் அரிய ஒன்று. இவ்வளவு தன்னடக்கத்துடன் மிஷ்கின் பேசி நான் பார்த்ததே இல்லை,எப்போதுமே அறைக்குள்ளேயே குளிர் கண்ணாடி அணிந்து கொள்ளும் மிஷ்கின்,நேர்காணல் ஆரம்பித்த மூன்றாவது நிமிடம், அதை கழற்றியேவிட்டார், அதன் பின்னர் அணியவேயில்லை.
இயக்குனர் மிஷ்கின் இசைஞானியை பாராட்டு மழையில் நனையவிட்டார் என்றால் மிகையில்லை. யாரும் தவறவிடக்கூடாத நேர்காணல் இது, இது போல இசைஞானி நேர்காணல் கொடுப்பது மிக மிக அபூர்வம்.இதை தயாரித்த இசையருவிக்கும்,யூட்யூபில் வெளியிட்ட டெக்சதீஷ். நெட்டிற்கும் மிக்க நன்றிகள்.
நந்தலாலா படத்தின் மகத்தான 25 பிண்ணணி இசைக்கோர்வைகளை நண்பர் சுரேஷ் குமார் அவரது தளத்தில் தொகுத்திருக்கிறார். தரவிறக்க சுட்டிக்கு
======00000======நந்தலாலா படத்தின் மகத்தான 25 பிண்ணணி இசைக்கோர்வைகளை நண்பர் சுரேஷ் குமார் அவரது தளத்தில் தொகுத்திருக்கிறார். தரவிறக்க சுட்டிக்கு
பாகம்-1
பாகம்-2
பாகம்-3
======00000======
0 comments:
கருத்துரையிடுக
வலை நண்பர்களே சான்றோர்களே சொன்னது பிடித்தால் ஓட்டு & கருத்து போட்டு ஊக்கம் கொடுங்கள்.