இசைஞானி பற்றி சில சுவையான குறிப்புகள்

இசைஞானி பற்றி சில சுவையான குறிப்புகள்
இளையராஜா (ஆங்கிலம்: Ilaiyaraajaa) (பி. ஜூன் 2, 1943; இயற்பெயர்: ராசய்யா), இந்தியாவின் தலைசிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களுள் ஒருவரான இவர் இசைத்துறையில் மிகவும் புலமை பெற்றவராக திகழ்கிறார். அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததின் மூலம் 1976 இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதுவரை 950 க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவருக்கு இந்திய அரசின் படைத்துறை-சாரா விருதுகளில் மூன்றாவது உயரிய விருதான பத்ம பூசண் விருது 2010-ஆம் ஆண்டு அளிக்கப்பட்டு கௌரவப்படுத்தப்பட்டது. தமிழக நாட்டுப்புற இசை, கருநாடக இசை மற்றும் மேற்கத்திய இசையில் புலமையும் முறையான பயிற்சியும் பெற்றவர். சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை நான்கு முறை பெற்றுள்ளார். திரைப்படங்களுக்கான சிறந்த பிண்ணனி இசையமைப்புக்கும் பெயர் பெற்றவர்.

வியாழன், 27 ஜனவரி, 2011

இசைஞானி இசையில் ஆர்யாவின் படித்துறை!!!இசைஞானியின் பேட்டி

ஆர்யாவின் த ஷோ பீப்பிள் தயா‌ரிப்பு நிறுவனம் படம் தயா‌ரிப்பது தெ‌ரியும். த ஷோ பீப்பிளின் முதல் தயா‌ரிப்புக்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்.

இசைஞானி இளையராஜா இசையில் எழுத்தாளர்கள் நாஞ்சில் நாடன், எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோர் முதல் முறையாக பாடல்கள் எழுதியிருக்கிறார்கள்.படத்தின் ஹைலைட்டாக இளையராஜாவின் இசை இருக்கும் என்று இப்போதே பெருமிதத்துடன் சொல்கிறது படித்துறை யூனிட்.

சுதா ரகுநாதன், பாம்பே ஜெயஸ்ரீ மற்றும் பேலா ஷிண்டே, கார்த்திக், பவதாரணி ஆகியோர் பாடல்களை பாடியுள்ளனர்.



சொந்தப்பட நிறுவனம் தொடங்கி அதில் புதுமுகங்களுக்கு வாய்ப்பளிக்கும் ஆர்யாவுக்கு ஆளுயர வெல்கம் போர்ட் வைத்து வாழ்த்தலாம்.





0 comments:

கருத்துரையிடுக

வலை நண்பர்களே சான்றோர்களே சொன்னது பிடித்தால் ஓட்டு & கருத்து போட்டு ஊக்கம் கொடுங்கள்.

Blog Widget by LinkWithin
Phonetic
Tamil Typewritter
Tamil 99