இசைஞானி பற்றி சில சுவையான குறிப்புகள்
இளையராஜா (ஆங்கிலம்: Ilaiyaraajaa) (பி. ஜூன் 2, 1943; இயற்பெயர்: ராசய்யா), இந்தியாவின் தலைசிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களுள் ஒருவரான இவர் இசைத்துறையில் மிகவும் புலமை பெற்றவராக திகழ்கிறார். அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததின் மூலம் 1976 இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதுவரை 950 க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவருக்கு இந்திய அரசின் படைத்துறை-சாரா விருதுகளில் மூன்றாவது உயரிய விருதான பத்ம பூசண் விருது 2010-ஆம் ஆண்டு அளிக்கப்பட்டு கௌரவப்படுத்தப்பட்டது. தமிழக நாட்டுப்புற இசை, கருநாடக இசை மற்றும் மேற்கத்திய இசையில் புலமையும் முறையான பயிற்சியும் பெற்றவர். சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை நான்கு முறை பெற்றுள்ளார். திரைப்படங்களுக்கான சிறந்த பிண்ணனி இசையமைப்புக்கும் பெயர் பெற்றவர்.
வெள்ளி, 14 மே, 2010
ஐ மெட் பாக் அட் மை ஹவ்ஸ்-ஹவ் டு நேம் இட்?
Labels:
1988,
Bach,
Beethoven,
Classical,
Handel,
How to Name it,
ilayaraja,
maestro,
Mendelssohn,
Mozart,
Tchaikovsky,
Vivaldi,
Wagner
அண்ட் வீ ஹேட் ய டாக்-ஹவ் டு நேம் இட்?
=====================
இசை ரசிகர்களுக்கு ஒரு புதிய பரிமாணத்தை அறிமுகம் செய்தது இந்த இசைத்தொகுப்பு. இத்தொகுப்பினை இசை மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜ சுவாமிகள் மற்றும் மேற்கத்திய இசையமைப்பாளரான ஜே.எஸ்.பாஹ் ஆகிய இருவருக்கும் காணிக்கையாக்கினார்.
கேளுங்க கேளுங்க கேட்டுக்குட்டே இருங்க.இது பொக்கிஷம் என்று உணர்வீர்கள்.இதை வீட்டாரிடமும்,நண்பரிடத்திலும் அறிமுகம் செய்து கேட்கச் செய்யுங்கள்.நீங்கள் அடைந்த பரமானந்தம் அவரும் அடையட்டும்
Labels:
1988,
Bach,
Beethoven,
Classical,
Handel,
How to Name it,
ilayaraja,
maestro,
Mendelssohn,
Mozart,
Tchaikovsky,
Vivaldi,
Wagner
டூ எனிதிங்- ஹவ் டு நேம் இட்?
================
இசை ரசிகர்களுக்கு ஒரு புதிய பரிமாணத்தை அறிமுகம் செய்தது இந்த இசைத்தொகுப்பு. இத்தொகுப்பினை இசை மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜ சுவாமிகள் மற்றும் மேற்கத்திய இசையமைப்பாளரான ஜே.எஸ்.பாஹ் ஆகிய இருவருக்கும் காணிக்கையாக்கினார்.
கேளுங்க கேளுங்க கேட்டுக்குட்டே இருங்க.இது பொக்கிஷம் என்று உணர்வீர்கள்.இதை வீட்டாரிடமும்,நண்பரிடத்திலும் அறிமுகம் செய்து கேட்கச் செய்யுங்கள்.நீங்கள் அடைந்த பரமானந்தம் அவரும் அடையட்டும்
Mad Mod Mood Fugue - ஹவ் டு நேம் இட்?
=========================
இசை ரசிகர்களுக்கு ஒரு புதிய பரிமாணத்தை அறிமுகம் செய்தது இந்த இசைத்தொகுப்பு. இத்தொகுப்பினை இசை மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜ சுவாமிகள் மற்றும் மேற்கத்திய இசையமைப்பாளரான ஜே.எஸ்.பாஹ் ஆகிய இருவருக்கும் காணிக்கையாக்கினார்.
கேளுங்க கேளுங்க கேட்டுக்குட்டே இருங்க.இது பொக்கிஷம் என்று உணர்வீர்கள்.இதை வீட்டாரிடமும்,நண்பரிடத்திலும் அறிமுகம் செய்து கேட்கச் செய்யுங்கள்.நீங்கள் அடைந்த பரமானந்தம் அவரும் அடையட்டும்
ஹவ் டு நேம் இட் ஃபார்?-ஹவ் டு நேம் இட்
கேளுங்க கேளுங்க கேட்டுக்குட்டே இருங்க.இது பொக்கிஷம் என்று உணர்வீர்கள்.இதை வீட்டாரிடமும்,நண்பரிடத்திலும் அறிமுகம் செய்து கேட்கச் செய்யுங்கள்.நீங்கள் அடைந்த பரமானந்தம் அவரும் அடையட்டும்
புதன், 12 மே, 2010
ஹவ் டு நேம் இட் – 24 ஆண்டுகளுக்கு முந்தைய மாபெரும் இசைமுயற்சி

இளையராஜாவின் வாத்திய இசைத் தொகுப்பான ‘எப்படிப் பெயரிட’(How to Name It) இசை ரசிகர்களால் இன்றும் கொண்டாடப்பட்டு வருகிறது. இணைய குழுக்களும், இசை ரசிகர்களும் இதை இளையராஜாவின் மாஸ்டர்பீஸ் என இன்றளவும் மதித்து வருகிறார்கள். கல்லூரி விழாக்களிலும், தனிப்பட்ட தொகுப்புகளிலும் பின்னணி இசையாக இத்தொகுப்பின் இசையை நீங்கள் கேட்டிருக்கக்கூடும். சோக கீதம், துள்ளலான இசை எனச் சிறு பகுதிகளாக இத்தொகுப்பின் சரடுகள் இசை ரசிகர்களின் ஞாபகத்தில் இன்றும் நிறைந்துள்ளன. என் நண்பர்களில் பலர் இப்பாடல்களில் பகுதிகளை மனப்பாடமாகப் பாடுவதை கேட்டிருக்கிறேன். பல நிகழ்வுகளின் ‘மூட்’ உருவாக்கும் இசையாக ‘எப்படிப் பெயரிட’ தொகுப்பு இன்றும் தமிழகத்தில் ஏதாவதொரு மூலையில் ஒலித்துக்கொண்டிருக்கிறது.
ஆனால், வெளியான கடந்த இருபத்து நான்கு ஆண்டுகளில் இத்தொகுப்பு பற்றி பதியப்பட்ட விமர்சனங்களை ஒரு கையளவில் அடக்கிவிடலாம். அங்கொன்று இங்கொன்றாகத் தகவல்கள் பதியப்பட்டிருக்க, புது ரசிகர்கள் தெளிவில்லாத விமர்சனங்களால் குழப்பமடையக்கூடிய நிலை உள்ளது. இப்போது, நாம் ஒற்றை வரியில் மதிப்பீடுகளை அள்ளித் தெளிக்கும் காலத்தில் இருந்தாலும், கடந்த 24 ஆண்டுகளாய் பெரும்பான்மையான விமர்சனங்கள் ட்விட்டர் பாணியிலேயே பதியப்பட்டிருக்கின்றன. எழுதப்பட்ட கட்டுரைகளும் தெளிவில்லாத சித்திரத்தை மட்டுமே நம்முன் வைக்கிறன. பல சங்கம (Fusion) இசைத் தொகுப்புகள், குறிப்பாகத் தமிழ் மையம் வெளியிட்ட Mozart meets India போன்ற தொகுப்புகளுக்கு அடிப்படையாக அமைந்த இத்தொகுப்புக்கு நடுநிலையான விமர்சனங்கள் உருவாகாத நிலை இன்றும் இருப்பது வேதனையானது. வெளியான காலகட்டத்திலிருந்து இன்றுவரை இருக்கும் சில முக்கியமான விமர்சனங்களையும், அவை முன்வைத்த கேள்விகளையும் மறுபரிசீலனை செய்வது இக்கட்டுரையின் நோக்கம்.
எல்லா நாட்டிலும் கலைஞர்கள் இயங்கும் துறைக்கு வெளியே அவர்களின் ஆளுமைகளை விமர்சிப்பது நடந்துகொண்டுதான் இருக்கிறது. கலைக்கு வெளியே நடக்கும் விவாதங்களுக்கு அதிகமாகத் தீனி போடுவதும் இவைதான். இப்படிப்பட்ட விமர்சனங்களை மீறியே ஒரு கலைஞன் அடுத்த கட்டம் நோக்கி நகர முடியும். இளையராஜா மீது வைக்கப்படும் விமர்சனங்களும், அதன் வழியே எழும் விவாதங்களும் பெரும்பாலும் இந்த அளவிலேயே நின்றுவிடுகின்றன. பெரும்பான்மையான விமர்சனங்கள், இளையராஜாவின் ஆளுமையை மட்டும் கருத்தில் கொண்டுள்ளன. இளையராஜாவின் இசைப் புரட்சி பற்றிய விமர்சனங்கள் எங்கும் பதியப்படுவதில்லை. அவர் நிகழ்த்திய இசைச் சாதனைகளை ஒதுக்கிச் செல்லும் நிலை பரிதாபமானது. இணையத்தில், தனிப்பட்ட குழுக்கள் மட்டுமே இளையராஜாவின் இசை குறித்த விவாதங்களைச் செய்து கொண்டிருக்கின்றன. பல சமயங்களில் அவை எங்கும் பதியப்படாமல் காற்றில் கரைந்துவிடுகின்றன.
கிராமிய இசைப் பாணி, கர்நாடக சாஹித்தியங்கள், மேற்கத்திய செவ்வியல் முறைகள் மூன்றையும் சரியான கலவையில் இணைத்து இனிமையான பாடல்களாகக் கொடுத்தது இளையராஜா செய்த அபாரமான சாதனை. இசையின் சட்டகத்தினுள் இருந்த எண்ணிலடங்கா சாத்தியங்களை இவர் பாடல்கள் திறந்து காட்டின. பலர் இளையராஜாவின் திரையிசை மூலம், கர்நாடக சங்கீத நுணுக்கங்களை எதிர்ப்பாதையில் சென்றடைந்தது வேறெங்குமே நடக்காத மாற்று நிகழ்வுகளாகும். பல ராகங்களை திரைப்பாடல்களில் கையாண்ட இவரின் பாண்டித்தியத்தைப் பற்றித் தனிப் புத்தகமே எழுதலாம். மேலும், ஒரு குறிப்பிட்ட இசைப் பாணியை மட்டுமே திரையிசையில் நிகழ்த்த முடியும் என்ற கருத்தை மாற்றி, பின்ன்ணி இசையைத் தமிழ்ப் படங்களில் மிக முக்கியமான கதாபாத்திரமாகவே ஆக்கிய சாத்னையும் இவரது.
திரையிசை வட்டத்தைத் தாண்டி 1986 ஆம் ஆண்டு மே மாதத்தில், ‘ எப்படிப் பெயரிட ‘( How to Name it) என்ற இசைத் தொகுப்பை இளையராஜா வெளியிட்டார் (இதில் பிரதான வயலின் கலைஞர் வி.எஸ்.நரசிம்மன். கடந்த வருடம் இவர் ராகசாகா என்ற சங்கம இசைத் தொகுப்பை வெளியிட்டார்). இன்று, திரைப்பட இசை வெளியிடுவது ஒரு பிரம்மாண்டச் சடங்காக மாறியுள்ளது. யூ ட்யூப் முதல் பல வலைத்தளங்களில் ஒளித்தொகுப்புகளாகவே இவை நமக்குக் கிடைக்கின்றன. 1986 ஆம் ஆண்டு ‘எப்படிப் பெயரிட’ இதே போல் ஒரு பொது அரங்கில் வெளியானது. ஆனால், இன்று அந்த வெளியீட்டு விழா பற்றி துணுக்குச் செய்திகள் மட்டுமே நம்மிடம் இருக்கின்றன; ஒரு புரட்சிகரமான தொகுப்பாக இந்திய அளவில் அது கவனிக்கப்படவில்லை. ஒரு அகழ்வாராய்ச்சி போல் தேடினால் மட்டுமே சிதிலங்களாய் ஒரு சில விவரங்கள் கிடைக்கின்றன. அவை முழுமையான பார்வையை கொடுப்பதில்லை.அசோகமித்திரனின் ‘காலக்கண்ணாடி’ கட்டுரைத் தொகுப்பில் இருக்கும் ஒரு கட்டுரை ஓரளவு இந்நிகழ்வை நமக்காகப் பாதுகாத்திருக்கிறது. அழைப்பு விடுத்திருந்த கர்நாடக இசைக் கலைஞர்கள் யாருமே அந்த வெளியீட்டுக்கு வரவில்லை என மேடையில் வருத்தத்துடன் இளையராஜா தெரிவித்ததாக இந்தக் கட்டுரையில் உள்ளது. (முழுக் கட்டுரையை கடைசியில் இணைத்திருக்கிறேன்.) இந்தத் தொகுப்பில் உள்ள அனைத்துப் பாடல்களும் கர்நாடக சங்கீத ராகங்களை அடிப்படையாக கொண்டவை என்றாலும், கர்நாடக இசைக் கலைஞர்கள் இதைக் கண்டுகொள்ளவேயில்லை என்பதையும் இளையராஜா பின்னர் கூறியுள்ளார்.
மேற்கிசை உலகில் நடந்த ஒரு நிகழ்வுடன் இதை ஒப்பிட்டுப்பார்க்கலாம் – May 29, 1913 ஆம் ஆண்டு ‘The Rite of Spring’ எனும் நடன-இசை பாரீஸில் கூச்சல், அடிதடிக்கிடையே அரங்கேற்றம் ஆனது. இன்றும்,அது உருவாக்கிய அதிர்வலைகளை ஆச்சர்யத்துடன் இசைக் கலைஞர்கள் நினைவு கூறுகிறார்கள். இந்த இசை இருபதாம் நூற்றாண்டை வரவேற்ற நவீன மேற்கிசைப் பாணியாக எல்லாராலும் ஒத்துக்கொள்ளப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இந்நிகழ்ச்சி பற்றி பலவிதமான ‘கதை’களும் உருவானது. பார்வையாளர்கள் மத்தியில் ஹிட்லரும் இருந்தார் என்பது அதில் புகழ் பெற்றக் கதை. இப்படியாக, ஒரு நிகழ்வைத் தொகுப்பதோடு மட்டுமல்லாமல் (வெளியான தேதி, நேரம் உட்பட), விழாவில் கலந்துகொண்டவர்கள், இசை நுட்பங்கள், அதன் கதைகள், கட்டுக்கதைகள் எனத் தொகுக்கும் வழக்கம் மேற்கிசை உலகில் உள்ளது.
The Rite of Spring இசையில் உள்ளது போன்ற ஆழமான இசை நுட்பங்கள் இளையராஜாவின் எப்படிப் பெயரிட’ இசைத்தொகுப்பிலும் உண்டு. அதேபோல், இத்தொகுப்பில் கறாரான கர்நாடக மரபுகளுக்கு உட்பட்டவை தவிர மரபை மீறிய இசையும் உள்ளது. `
சுஜாதா, 1990ஆம் ஆண்டு மார்ச் மாத கணையாழியின் கடைசி பக்கத்தில் – `இளையராஜாவின் How to Name it ,It is Only Wind (Nothing But Wind தொகுப்பை இப்படிக் குறிப்பிடுகிறார்) போன்ற வினோதப் பெயர்களுடன் ஸிம்பொனியையும் சிம்மேந்திரமத்திமத்தையும் ஒட்ட வைக்க பெரும்பாடு பட்டாலும் கேட்கும்போது திட்டு திட்டாகத்தான் இருக்கிறது. சங்கராபரணம் ஒரு மேஜர் ஸ்கேல் என்றும் கீரவராளியோ ஏதோ மைனர் ஸ்கேலுக்கு சமானும் என்றும் ப்ரொபஸர் ராமநாதன் சொல்லியிருக்கிறார். இருந்தும் இரண்டையும் இணைக்கும் முயற்சிகள் வெள்ளைக்காரிக்கு தலைபின்னி பூ வைத்தாற் போகத்தான் அசம்பாவிதமான இருக்கின்றன. காரணம் , இரண்டும் அமைப்பில் அஸ்திவாரத்தில் வேறுபட்டவை. மேஜர், மைனர் என்பது ராகங்கள் அல்ல. அவை ஸ்வரங்களுக்கு இடையே ஆன ஒருவித பிணைப்பு, அல்லது உறவுமுறை` என இசையமைப்பாளர்களுக்கு பாடம் எடுக்கும் விதமான விமர்சனத்தை முன்வைத்தார். இப்படிபட்ட தன் வயப்பட்ட கருத்துகள் இத்தொகுப்பின் அடிப்படை நோக்கத்தை வெளிப்படுத்தத் தவறியது.
இத்தொகுப்பை ரசிக்க சங்கம (Fusion) இசையின் இலக்கணத்தை புரிந்து கொள்வது அவசியம். சங்கம இசைக்கென்று இலக்கணம் எதுவும் இல்லையென்றாலும் அதில் வாத்தியங்களும், ஒலியமைப்பும் கையாளப்படுவதைப் பொறுத்து இரண்டு அமைப்புகளைக் கொண்ட இலக்கணத்தை உருவகிக்கலாம்.
இரண்டு வகையான சங்கம இசைப் பாணிகள் உள்ளன. முதல் பாணியில் – ஒன்றோடு ஒன்று சம்பந்தமில்லாத பல ஒலித் துண்டுகள், ஒரே நேரத்தில் இணக்கமாக, இனிமையாக ஒலிக்கும். இது பண்யிணைப் புள்ளி (Counterpoint) பாணியாகும். இது பிரபலமான பலத் தொகுப்புகளில் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. பல ஒலிகள் ஒரே நேரத்தில் ஒலிப்பதால் இது செங்குத்தான (Vertical) இசை வடிவம் என்றாகிறது.
அடுத்த பாணியில் – வரிசையாக அடுத்தடுத்து ஒலிக்கும் வெவ்வேறு இசை வடிவங்கள். ஒரு ஒலித் துண்டு குறிப்பிட்ட நேரம் ஒலிக்கும். இதைத் தொடர்ந்து மற்றொரு ஒலி ஒலிக்கும். இப்படி அடுத்தடுத்து தொடர்சியாக வருவதால், இது கிடைநிலை (Horizontal) வடிவம் என்றாகிறது.
இந்த இரு இசைப் பாணியையும் பயன்படுத்தி, மேற்கத்திய இசையில் பல வடிவங்கள் உள்ளன. சொனாட்டா (Sonata), கான்சர்ட்டோ (Concerto), சிம்பொனி (Symphony), காண்டாடா(Cantata), ஃபூக் (Fugue) போன்ற வடிவங்களில் இவ்விரு வகைகளும் உள்ளன. ஒவ்வொன்றும் பல பிரிவுகள் கொண்டவை. இசைக்கருவிகளின் ஒலியை முறையாக அடுக்கி,இனிமையான இசையை கொடுப்பது இவற்றின் பொது அம்சமாகும்.
இளையராஜாவின் இசையின் வேர் ஜான் செபாஸ்டியன் பாக்கின் (Johann Sebastian Bach) இசை பாணியிலிருந்து உருவானது. இவர் திரைப்படங்களிலும் பாக்கின் பாணியையே அதிகமாகப் பயன்படுத்தியுள்ளார். ஃபூக் அமைப்பில் மேற்கிசையில் முத்திரை பதித்தவர் பாக். முப்பத்துக்கும் மேலான உள்ளமைப்புகளை உடைய ஃபூக், அடிப்படையில் மூன்று பகுதிகளைக் கொண்டது. சில ஃபூக் அமைப்புகள் மூன்றுக்கு மேற்பட்ட பகுதிகளையும் கொண்டிருக்கும். முதல் பகுதியும், கடைசி பகுதியும் ஒரே வகையான ஒலிகளைக் கொண்டிருக்கும்(அவை வேகத்தில் மாறுபடலாம்) . நடுப்பகுதியில் மட்டும் சில மாற்றங்களுடன் ஒலித்து, முதல் பகுதி இசையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும். இசைக்கருவிகளின் ஒலியை முறையாக அடுக்கி, அவை ஒலிக்கவேண்டிய வரிசையில் ஒன்றாகக் கோர்ப்பது இசை ஒருங்கிணைப்பாளரின் (Conductor) மிகப்பெரிய சவாலாகும்.
இந்த வடிவத்தை இளையராஜா பல்லாயிரக்கணக்கான திரையிசைப் பாடல்களிலும், பின்ணனி இசையிலும், ஃபூக்கின் பல சாத்தியங்களாக நுழைத்துள்ளார். பண்யினைப் புள்ளி உத்தியை கச்சிதமாக பயன்படுத்தும் இசை பாணியாக ஃபூக் இருப்பதால், பல இசைக் கருவிகளின் சங்கமமும் இங்கு சாத்தியமாகிறது.
திரைப்படத்தின் பின்ணனியில் இருவித வயலின் இசை ஒன்றாகச் சேர்வதும் நடுவே ஒரு இனிமையான குழலோசை ஒலிப்பதும் பண்யினைப் புள்ளியில் சேர்வதால் இனிமையான இசையாகிறது. இவை மட்டும் போதாது. சரியான தொனியில், தேவையான கால அளவில் ஒலித்தால் மட்டுமே இது இனிமையான இசையாகும். இல்லையென்றால் வெவ்வேறு இசையாக தனித்தனியாக ஒலித்து, இனிமையற்றதாக மாறிவிடும்.
‘How to name it’ இசைத்தொகுப்பு வெளியானபின் பல காட்டமான, நிராகரிப்பு தொக்கிய விமர்சனங்கள் முன்வைக்கப்படன. ராஜலகஷ்மி என்பவர் மீட்சி இதழில் எழுதிய ‘இளையராஜாவின் இசைக்குழப்பங்கள்’ எனும் கட்டுரை இப்படிப்பட்ட கட்டுரைகளின் ஒரு சான்று. இளையராஜாவின் இசைப் பிரயோகங்களை அளவுகோலாகக் கொள்ளாமல், அரசியல் சார்புகளை மட்டும் கணக்கில் கொண்டு எழுதப்பட்ட பல கட்டுரைகளில் இதுவும் சேர்ந்துகொண்டது.
உதாரணத்துக்கு, இந்தக் கட்டுரையில் I met Bach in my house மற்றும் ..and we had a talk பாடல்களில் எந்த புதுமையும் இல்லை, ஏதோ ஒரு இந்திப் பாடலை நினைவூட்டுகிறது என்ற ஒற்றை வரியில் இப்பாடல்களின் தலையெழுத்தை நிர்ணயிக்கிறது. ஆனால், உண்மையில் பாக் வழியை பின்பற்றி அமைந்த முத்திரை பாடல்களாக ‘I met Bach in my house’ மற்றும் ‘..and we had a talk’அமைந்திருக்கிறது. இவை இளையராஜாவின் இசையில் வெளிபட்ட பாக்கின் தாக்கத்தை திட்டவட்டமாக நிலைநிறுத்துகிறது. சங்கம இசையின் கருத்தை தெளிவாக உணர்த்தும் இப்பாடல்கள், இவ்விரு இசை மேதைகளின் ராக அலங்காரங்களை அருகருகே நம் கண் முன் நிறுத்துகிறது.நம்மை சந்திக்க வரும் விருந்தாளிகளுக்கு நம் முறைப்படி வரவேற்பு கொடுப்பது வழக்கம். நம் விருந்தாளிக்கு புரியும் மொழியில் பேசினால் மட்டுமே கருத்து பரிவர்த்தனை நடக்கும். இதை மனதில் கொண்டு, இளையராஜா கர்நாடக ராக பாணியில் பாக்கின் புகழ் பெற்ற வயலின் இசை வடிவமான Goldberg variations மற்றும் Bourre in E minor இரண்டையும் நிகழ்த்திக்காட்டுகிறார். `நம் இசை வடிவங்களுக்குள் இருக்கும் ஒற்றுமையை கேளுங்கள்` – என பாக்கை நோக்கி இளையராஜா சொல்வது போல் இந்தப் பாடல் இருக்கிறது.
தொடர்ந்து இக்கட்டுரை இதே போன்ற தட்டையான பார்வையை முன்வைக்கிறது. இதன் உச்சகட்டமாக, Is it Fixed, The Study of Violin, You Cannot be free என்ற பாடல்களில் எந்த புதுமையும் இல்லை , இளையராஜா இசையமைத்த திரைப்பட பாடல்களை நினைவூட்டுகிறது என்று சில வார்த்தைகளில் இப்பாடல்களில் நுட்பம் மூழ்கடிக்கப்பட்டுள்ளது. இதுதான் உண்மையா? இப்பாடல்கள் என்ன உணர்வுகளை வெளிப்படுத்துகிறது?
இப்பாடல்கள் மூலம் இளையராஜா உருவாக்க விரும்பும் உணர்வுகள் மிக நுட்பமானவை. இம்மூன்று பாடல்களும் உருவாக்கும் உணர்வுகள் ஒன்றோடு ஒன்று மிகவும் நெருக்கமானவை. இத்தொகுப்பில் உள்ள பாடல்கள் கர்நாடக சங்கீத ராகங்களை அடிப்படையாகக் கொண்டவை. ஆனாலும்,இந்த மூன்று பாடல்களும் மரபான இந்திய மற்றும் மேற்கிசை வடிவங்களிலிருந்து விலகி உள்ளன. குறிப்பாக, நேர அளவுகள்(தாளங்கள்) மிகச் சுதந்திரமாக கையாளப்பட்டிருக்கின்றன. இச்சுதந்திரம், ஜாஸ் பாணியில் வழுக்கிச் செல்லும் ஒலிகளை உருவாக்குகிறது. கர்நாடக சங்கீதத்தின் கறாரான இலக்கணத்தை மீறும் முயற்சிகளைச் செய்திருப்பது , புரட்சிகர இசையாக இன்றும் இதை நிலைநிறுத்துகிறது. பாடல்களின் பெயர்கள் இசையமைப்பாளரின் எண்ணத்தையும், மரபு மீறிய முயற்சியயும் பிரதிபலிக்கவே செய்கிறது.ஒரு குறிப்பிட்ட மேற்கிசை வடிவத்தில் இந்த மூன்றும் பொருந்துவதில்லை. சோதனைப் பகுதிகளாக ஒலிக்கும் இவை சிக்கலான கட்டமைப்புகள் கொண்டவை. ஆனாலும், இவை அடிப்படையில் கர்நாடக ராகங்களை மையமாகக்கொண்டு அமைந்த பாடல்கள். அம்மரபுகளை மீறுவதில் உள்ள முனைப்பு பாடலின் அமைப்பிலும் அதன் பெயரிலும் தெரிகிறது.
மேலும், கோட்பாட்டு ரீதியில் இவை இசையின் இரு நிலைகளை உணர்த்துகிறதாகத் தோன்றுகிறது. கர்நாடக சங்கீதத்திலுள்ள கறாரான இலக்கணங்களுக்கிடையே நிலவும் சுதந்திரம் இம்மூன்று பாடல்களிலும் வெளிப்படுகிறது. கர்நாடக சங்கீதத்தின் கட்டமைப்பில், மேற்கிசை வடிவங்கள் இணைவதன் மூலம் இச்சுதந்திரத்தின் சாத்தியங்கள் அதிகரிக்கின்றன.
இப்படிப்பட்ட கட்டுரைகளில் வெளிப்படும் மிக முக்கியமான குற்றச்சாட்டு – இதைப் போன்ற இசையை அவர் திரைப்படப்பாடல்களிலும், பிண்ணனி இசையிலும் ஏற்கனவே நிகழ்த்திக்காட்டியுள்ளார். அதனால் பல பாடல்களையும் சிறு துண்டுகளாக இணைக்கும் உணர்வே ஏற்படுகிறது – என்பதாகும். இந்திய இசை வரலாற்றில் இதற்கான பதில் உள்ளது.
கர்நாடக இசை தோன்றிய காலத்திலிருந்து , இந்த டிசம்பர் சீசன் வரை பாடப்படும் பாடல்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்டவை. அடிப்படையில் இந்தப் பாடல்களை பாடகர்கள் வெவ்வேறு விதமாகப் பாடுவர். இதை Rendition – நிகழ்த்துதல், பாடும் பாணி என சுதந்திரமாக தமிழாக்கலாம். திரையிசையில் இளையராஜா உபயோகித்த ராக வெளிப்பாடுகள் இத்தகைய தனி பாணியாகும். ஒரே பாடலில் ஒன்றுக்கும் மேற்பட்ட ராகங்களை உபயோகித்து இனிமையான பல பாடல்களை உருவாக்கியுள்ளார். பலதரப்பட்ட வாத்தியக்கருவிகளை உபயோகித்து, உறுத்தாத பல இசைத் துண்டுகளை திரைக்கதைக்கேற்ப பிண்ணனியில் இசைத்துள்ளார். குறிப்பாக, கிராமிய இசை, இந்திய மற்றும் மேற்கத்திய இசை நுணுக்கங்களை சரியான கலவையில் தன் முதல் படத்திலிருந்து உருவாக்கி வருகிறார். இத்தொகுப்பில் உள்ள பாடல்கள் இம்முயற்சிகளை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்லும் பணியைச் செய்கின்றன.
இத்தொகுப்பின் மையக்கருத்தை அடிப்படையாக்கொண்டு மூன்று பாடல்கள் உள்ளன. இவை இத்தொகுப்பின் மாஸ்டர்பீஸ் என்று உறுதியாகச் சொல்ல முடியும். மூன்று பகுதிகளைக் கொண்ட `எப்படிப் பெயரிட` பாடல் ஃபூக் அமைப்பைக் கொண்டது. தெளிவான சிம்மமேந்திர மத்யமம் ராகத்தில் தொடங்கி, சண்முகப்பிரியாவில் கலக்கும் முதல் பகுதி, நடுப் பகுதியில் உள்ள வீணை, வயலின் அமைப்புக்கு அழைத்து செல்கிறது. இரண்டாவது வயலின் ஸ்வரங்களுக்கிடையே குதித்து மேற்கிசை பாணியில் ராகங்களுடன் இணைகிறது.
இத்தொகுப்பிளுள்ள இசையை கேள்வி-பதில் பாணியில் புரிந்துகொள்ளலாம்.சில ஒலிகள் கேள்விகளாய் முன் வைக்கும் இடத்திலிருந்து வரும் புதிய ஒலி பதிலாக மாறுகிறது. இது இசையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கிறது. இந்தப் பாடலில் முதன்மை வயலினும், இரண்டாவது வயலினும் கேள்வி கேட்பது போல் உயரச் சென்று ஸ்வரங்களை நிறுத்துகிறது. இந்நிலையில் ஸ்வரங்கள் உருவாக்கு இசை முடிச்சுக்களை உணரலாம். பின்னர் பதில் சொல்லும் வகையில் அடுத்த பகுதி இம்முடிச்சை விலக்குகிறது.
அடுத்தப் பாடலான `Mad Mad Fugue’ சுத்தமான ஃபூக் அமைப்பாகும். இத்தொகுப்பிலுள்ள மற்ற பாடல்களை விட இப்பாடல் தெளிவான கட்டமைப்பைக் கொண்டது. திட்டவட்டமான செவ்வியல் தன்மையான ஃபூக் அமைப்பில், நிகழ்கால வாத்தியக்கருவியான டிரம்ஸ் இணைகிறது. இப்படிப்பட்ட இசைக்கோர்வையின் நிர்வகிப்பு ஒருங்கிணைப்பாளரின் திறமையை வெளிக்கொண்டு வருகிறது. ஸ்வர வரிசையின் (ஸ்வரமாலையின் (Chromatic) ) தேர்வு பிரம்மாண்டமான வடிவமைப்பாக உருவாகிறது. குறிப்பாக, கடைசி ஒரு நிமிடத்தில், வயலினும் டிரம்ஸும் செய்யும் சாகசங்கள், திரைப்பட உச்சகட்ட காட்சி போல வேகமாகச் செல்கிறது. மிகக் கட்டுக்கோப்பான ஃபூக் வடிவத்தில் மின்னல் வேகத்தில் நுழையும் இந்தப் பகுதி, பாடலின் பெயரை மீண்டும் நினைவூட்டுகிறது.
Chamber Welcomes Thyagaraja பாடல் ஒவ்வொரு இசைக்கருவியும் கல்யாணி ராகத்தை விரிவாக கையாள்கிறது. இரண்டாவது பகுதியில் இணையும் மேற்கிசை ஒலிகள், ஒற்றை வயலினுடன் சேர்ந்து கம்பீரமான இசை வடிவமாக மாறுகிறது. தியாகப்பிரம்மம் இப்படியொரு குழு இசை நடக்கும் அரங்கில் நுழைந்தால், அவரை வரவேற்க ஒலிக்கப்படும் வரவேற்பு இசை போல் கம்பீரமாய் முடிகிறது.
இத்தொகுப்பு இளையராஜாவின் இசையில் ஆதிக்கம் செலுத்தும் ஆளுமைகளுக்காக படைக்கப்பட்ட விருந்தாகும். தன் இசையின் வேர் இவர்களிடம் தொடங்குவதைத் தெளிவாக உணர்த்தியுள்ளார். மேலும், சம்பிரதாயமான இசை வடிவங்களிலிருந்து முற்றிலும் விலக இளையராஜா எடுத்த முக்கியமான முயற்சி. இதில் பல தொழில்நுட்ப புதுமைகளையும் அவர் நிகழ்த்திக்காட்டியிருக்கிறார். குறிப்பாக ஷெனாய், பசூன் (Bassoon) போன்ற புதுவித குழற்கருவிகளை உபயோகித்துள்ளார். எந்த புது பாணியும் காற்றிலிருந்து தோன்றுவதில்லை.
கலைஞனுக்குள் எழும் கேள்விகளே கலையாய் வெளிப்படுகின்றது. இளையராஜா எடுத்துக்கொண்டிருக்கும் கரு, முதல் திரைப்படத்திலிருந்து அவருடன் இருந்தவை – குறிப்பாக சங்கம இசை முன்வைக்கும் சவால். இரு இசை வடிவங்களின் சங்கமத்தை, முதல் திரைப்படத்திலிருந்து கையாண்டு வந்தாலும், இத்தொகுப்பு பல எல்லைகளைத் தொட்டிருக்கிறது. இதில் முன்வைத்திருக்கும் சவால் இன்றும் இளையராஜாவைத் தொடர்கிறது என்றே நமக்குத் தோன்றுகிறது.
குறிப்பாக, You cannot be free, Is it fixed போன்ற பாடல்கள் உருவாக்கிய புதிய இசை பாதைகள், பாக்கின் Goldberg variations போல் இன்றளவும் யாரும் தாண்டிச்செல்ல இயலாத முயற்சியாய் இருப்பதே இத்தொகுப்பின் வெற்றி.
அசோகமித்திரன் கட்டுரையிலிருந்து…“இந்த ஊரில் உள்ள சங்கீத வித்வான்கள் அனைவருக்கும்தான் நான் அழைப்பு அனுப்பியிருந்தேன்” என்று இளையராஜா கூறினார். ஆனால், அவருடைய புதிய படைப்பான `எப்படிப் பெயரிட` இசைத்தட்டு வெளியீட்டு விழாவுக்கு வந்திருந்தவர்கள் அநேகமாக எல்லாருமே சினிமாத் துறையினர்தான். டி.வி.கோபால கிருஷ்ணன் ஒரு விதிவிலக்கு. ஆனால், கோபால கிருஷ்ணனையே பாதி சினிமாக்காரர் என்று நினைப்பவர்களுண்டு.
சங்கீதத் துறையினர் வரவில்லை என்றாலும் விஞ்ஞானி ராஜா ராமண்ணா நிகழ்ச்சிக்குத் தலைமைத் தாங்கி, இளையரஜாவின் மேற்கு-கிழக்கு இசை இணைப்பு முயற்சிகள் ரசமானவை; பல ஆண்டுகள் முன்பு அவரே எண்ணியிருந்த முயற்சிகள் என்றார். பழுத்த அனுபவம் மிகுந்த பியானோ நிபுணரான ஹாண்டல், இளையராஜாவிடம் அழைத்துச் சென்ற மேல்நாட்டு இசைக் கலைஞர்கள் அனைவரும் இளையராஜாவின் கிரகிப்பு ஆற்றலையும், திரைப்படக் காட்சிக்கு ஏற்றபடி நொடிப்பொழுதில் இசை அமைத்து அதை வாத்திய கோஷ்டிக்குத் தெரிவித்து ஒலிப்பதிவு செய்யும் திறமையையும் கண்டு வியந்திருக்கிறார்கள் என்றார். `எப்படிப் பெயரிட` இசை மாஸ்கோவில் நடக்கவிருக்கும் இந்திய விழாவுக்கு எடுத்துச் செல்லப் படவேண்டும் என்றார். நாற்பதாண்டுகளாக இந்தியத் திரைப்படத் துறையில் பெருமதிப்புக்குரியவராக இருந்து வரும் நெளஷாத் அவர்கள் இளையராஜாவிடம் கற்க நிறைய இருக்கிறது என்றார். இவை எல்லாம் சாதாரணமாகக் கிடைக்ககூடிய பாராட்டுகள் அல்ல.
வெறும் டியூன்கள் என்று பிரித்துப் பார்த்தோமானால் `எப்படிப் பெயரிட` இளையராஜாவின் பல முக்கிய திரைப்படங்களின் சிறப்பான இடங்களை நினைவுபடுத்தும். ஆனால் இந்தப் படைப்பின் சிறப்பம்சம் வாத்திய கோஷ்டி நிர்வகிப்பு; திரு.வி.எஸ். நரசிம்மனின் பிரதான வயலின்; சுவரூபத்தைக் கலைக்காதபடி இந்திய ராகங்களுக்கு மேலைய இசை வடிவம் தருதல். இத்திசையில் முயற்சிகள் இதுவரை செய்யப்படவே இல்லை என்று கூற முடியாது. ஐந்தாறு மாதங்கள் முன்பு ஒரு போர்ச்க்கீசிய இசைக்குழுவுடன் சென்னை வந்த வயலின் நிபுணர் எல்.சுப்பிரமணியன் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் இத்தகைய முயற்சிகளை அரங்கேற்றியிருக்கிறார்.
`சங்கீதக் கனவுகள்` என்ற நூலின் ஒவ்வொரு எழுத்தும் இளையராஜாவால் எழுதப்படாமல் இருக்கலாம். இளையராஜா எழுத்தாளரல்ல. ஆனால் நூலில் கூறப்பட்டிருக்கும் அனுபவங்கள், சிந்தனைகள், உணர்வுகள் அவருடையதே என்பதைச் சந்தேகிக்க இடமில்லை. உண்மையில் இம்மாதிரி நூல்களில் இவைதான் முக்கியம். ஐரோப்பாவில் கடந்த நூற்றாண்டுகளில் வாழ்ந்த இசை மேதைகளின் இல்லங்கள் ஷேத்திரங்களாகப் பராமரிக்கப்பட்டு வரும் விசுவாசத்தைக் கண்டு மனமுருகி, `நமது நாட்டில் தியாகப்பிரும்மம் வாழ்ந்த வீட்டை எப்படி வைத்திருக்கிறார்கள் என்று பார்த்தால் சொல்வதற்கே வெட்கமாயிருக்கிறது…
என்னைக் கேட்டால் தியாகையருக்குக் கோயிலையே கட்டிவிடுவேன்…நான் கேட்டால் `நீ சினிமாக்காரன்` என்பார்கள்.` என்று ஓரிடத்தில் இளையராஜா எழுதியிருக்கிறார். இப்படி அந்த நூலில் பல பொறிகள். இவ்வளவு உலக நடப்புப் பரிச்சயம் கொண்ட இளையராஜாவுக்கு அவருடைய விழாவுக்கு சங்கீதப் பிரமுகர்கள் வராதது வியப்பைத் தந்திருக்காது.
என்னைக் கேட்டால் தியாகையருக்குக் கோயிலையே கட்டிவிடுவேன்…நான் கேட்டால் `நீ சினிமாக்காரன்` என்பார்கள்.` என்று ஓரிடத்தில் இளையராஜா எழுதியிருக்கிறார். இப்படி அந்த நூலில் பல பொறிகள். இவ்வளவு உலக நடப்புப் பரிச்சயம் கொண்ட இளையராஜாவுக்கு அவருடைய விழாவுக்கு சங்கீதப் பிரமுகர்கள் வராதது வியப்பைத் தந்திருக்காது.நன்றி – ரா.கிரிதரன் (சொல்வனம் – இணைய மாத இதழில் வெளியானது) பலரை சென்றடைய வேண்டும் என்னும் நோக்கில் இந்த மறு பதிப்பு
இசைஞானியின் இசையில் திருவாசகம் பற்றி எஸ்.ராமகிருஷ்ணன்.
இளையராஜாவின் திருவாசகம் கேட்டபோது.
இரண்டு மாதங்களுக்கு முன் ஜானி படத்தில் வரும் காற்றில் எந்தன் கீதம் பாடலை கேட்கத் துவங்கி அன்றிரவு முழுவதும் இளையராஜாவின் பாடல்களாக கேட்டுக் கொண்டிருந்தேன். அது போதாமல் மறுநாள் நண்பர்கள் வசமிருந்த இளையராஜாவின் பாடல்கள் தொகுப்பில் இருந்து 250 பாடல்கள் கொண்ட இரண்டு குறுந்தகடினை வாங்கி வந்து கேட்கத் துவங்கினேன். நாலைந்துநாட்கள் இளையராஜா மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தேன்.
ஜானகி, சித்ரா, ஜென்சி, பாலசுப்ரமணியம்,ஜேசுதாஸ், மலேசியா வாசுதேவன், இளையராஜா என்று மாறும் குரல்களும் இசையமைப்பின் வியப்பும் மேலிட இளையராஜாவின் அலுத்துபோகாத மேதமை இன்றும் அதீத உற்சாகம் தருவதாக இருந்தது.
இவ்வளவு திரையிசை பாடல்களை தொடர்ச்சியாக நான் கேட்டதேயில்லை. எப்படியும் நானூறுக்கும் மேற்பட்ட பாடல்கள் கேட்டிருப்பேன்.
இதில் பகல் எல்லாம் பாட்டு கேட்பது, படுக்கையில் கிடந்தபடியே இரவெல்லாம் கேட்பது. விழித்து எழுந்தவுடன் சில மணி நேரம் கேட்பது என்று விருப்பமான மனிதரின் கையை பிடித்துக் கொண்டு சுற்றியலைவது போலகேட்டுக் கொண்டேயிருந்தேன். புத்தகங்கள் திரைப்படங்கள் எதிலும் நாட்டம் திரும்பவேயில்லை.
சிறுவயதில் பல பாடல்களை இசைதட்டில் கேட்கும் போது ஏற்படும் நெருக்கம் திரையில் பார்க்கும் போது ஏற்படாது. அதற்கு மாறாக சில பாடல்களைக் கேட்கும் போது நடிகர் நடிகைகளை மறந்து கேட்க முடிவதேயில்லை. எல்லா ஊர்களிலும் அந்த காலத்தில் ஒரு டி.எம்.எஸ், ஒரு சுசிலா இருந்தார்கள். அவர்கள் சினிமா பாடல்களை அப்படியே அச்சு பிசகாமல் அதே குரலில் பாடி கைதட்டு வாங்குவார்கள்.
என் பள்ளியில் கூட ஒரு சுசிலா படித்தாள். அவளை தமிழ்தாய் வாழ்த்து பாடுவதற்காகவே வைத்திருந்தார்கள். பள்ளிவிழா நாட்களில் அவள் சினிமாபாடல்களை பாடுவாள். அந்த பாடல்களை அத்தனையும் சிறப்பானவை. எப்படி அதை தேர்வு செய்து அந்த பாடல்வரிகளை நினைவில் வைத்திருந்து பாடுகிறாள் என்று வியப்பாக இருக்கும்
அது எம்எஸ்விஸ்வநாதன் காலம். ஒருமுறை எம்.எஸ்வி கச்சேரிக்காக விருதுநகர் வந்திருந்தார். கொட்டும் மழையில் நனைந்து கொண்டே எங்கே நிம்மதி கேட்டோம். அந்த நாட்களில் திரையிசை பாடல்கள் மட்டுமே வெகுமக்களின் பிரதான ரசனையாக இருந்தது. எல்லா வீட்டில் அந்த பாடல்கள் முணுமுணுக்கபட்டன. விசேச நாட்களில் காலை துவங்கி இரவு வரை ரிக்கார்ட் போட்டார்கள்.
அந்த நினைவில் பாடல் என்றாலே உரத்தசப்தத்தில் கேட்க வேண்டும் என்று உள்ளுற பதிந்து போயிருக்கிறது. அதிலிருந்து விடுபடுவதற்கு பல வருசங்கள் ஆகிப்போனது. என் கல்லூரி நாட்களில் நண்பர்கள் இளையராஜாவின் தீவிர ரசிகர்கள். அவருக்காகவே படம் பார்த்தார்கள். அப்போது தான் டூ இன் ஒன் அறிமுகமானது. ஆகவே பாடல்களை ரிக்காடிங் சென்டரில் போய் பதிந்து கொண்டு வந்து கேட்பது என்பது பெரிய விஷயமாக இருந்தது.
உதிரிப்பூக்கள் முள்ளும் மலரும் கிழக்கே போகும் ரயில் புதிய வார்ப்புகள் என்று இளையராஜாவை பற்றி பேசாத நாட்களே இல்லை. அது வளர்ந்து எண்பதுகளின் உச்சத்தை அடைந்த போது நாளைக்கு ஒரு படம் பார்க்கும் ஆளாகியிருந்தேன். ஏதாவது ஒரு படத்தை இரவுக்காட்சி பார்ப்பது என்பது பல வருடமாக எனது வழக்கம். அப்படி படம்பார்த்துவிட்டு திரும்பும் பின்னிரவில் ஆள் அரவம் அற்றுப்போன தெருவில் சைக்கிளை நிறுத்தி சாய்ந்து கொண்டு இளையராஜாவை பற்றி பேசிக் கொண்டிருப்போம்.
எல்லா ஊரிலும் பின்னிரவிற்கு என்றே ஒரு டீக்கடை திறந்திருக்கும். அங்கே நிச்சயம் இளையராஜாவின் பாடல் ஒன்றை போட்டுக் கொண்டிருப்பார்கள்.
ப்ரியா பாடல் வந்த புதிதில் அதை ஒரு நாளைக்கு ஐம்பது தடவை கேட்ட நண்பர்கள் என்னோடு இருந்தார்கள். அது ஒரு மயக்கம். சினிமாவை மீறிய பாடல்களை கேட்கவும் பின்னால் அலையவும் செய்த நாட்கள் அது.
இளையராஜாவின் திருவாசகம் வெளியான நாட்களில் நானும் இயக்குனர் ஜீவாவும் ஒரு நாளிரவு காரில் மகாபலிபுரத்திற்கு சென்றிருந்தோம் வழி முழுவதும் , காரில் திருவாசகம் ஒலித்தபடியே வந்தது. முதன்முறையாக கேட்டபோது அதை மனது ஏற்றுக் கொள்ள மறுத்தது. முக்கிய காரணம் அந்த பாடல்களை ஒதுவார்கள் பாடி கேட்டிருக்கிறேன். அது மனதில் அழியாமல் ஒலித்தபடியே இருந்தது.
ஆனால் அன்றைய இரவில் கடற்கரை அருகில் நல்ல இருளில் மணல்வெளியில் அமர்ந்தபடியே திருவாசகம் கேட்ட போது புற்றில் வாழ் அரவம் வேண்டேன் என்ற வரிகளும் இசையும் மனதை பாரம் போல அழுத்த துவங்கி முன்னறியாத துயரும் விம்மலும் உருவாகியது.
கடலின் மீது தொலைவில் தெரியும் ஆகாசத்தில் நட்சத்திரங்கள் மின்னிக் கொண்டிருந்தன. வீதிகளை , வீடுகளை துயில் கொள்ள செய்திருந்தது இருள் . யாவையும் விழுங்கியபடியே திருவாசகம் மெல்ல ஒரு அலை காலடியில் உள்ள மணலை இழுத்து போவது போல மனதை கொஞ்சம் கொஞ்சமாக தன்வசமாக்கி கொண்டிருந்தது. பரவசமும் தத்தளிப்பும் கூடிய அப்படியான மனநிலை சில தருணங்களிலே தான் ஏற்படுகிறது.
எங்கோ அந்த இருளினுள் புன்னகையுடன் இளையராஜா அமர்ந்திருப்பது போன்ற நெருக்கம் உண்டானது
பால்யவயதிலிருந்து கேட்டிருந்த தேவாரம் திருவாசகம் மனதில் ஏற்படுத்தியிருந்த அத்தனை திரைகளையும் விலக்கி இன்னொரு தளத்தில் திருவாசகம் ஒலிக்கிறது. அது ஆன்மீக அனுபவமல்ல. மாறாக தன்னிருப்பின் சாரத்தை வெளிப்படுத்தும் அற்புதமான தருணம். இசை உயர்கிறது. குரல் ஆழந்த வேதனையை வெளிப்படுத்துகிறது. மனது நிலை கொள்ள மறுத்து நழுவுகிறது. காற்றில் படபடக்கும் ஈரத்துணியின் சில்லிடலைப் போல ஏதோவொரு சில்லிடலை தருகிறது இசை .
இதே போன்ற ஒரு அனுபவத்தை திருச்சுழி கோவிலில் ஒரு முறை அனுபவித்திருக்கிறேன். பிரகாரத்தில் நடந்து வரும் போது எங்கிருந்தோ நாதஸ்வரத்தின் மயக்கும் இசை மிதந்து வந்தது. கல்படியில் அமர்ந்திருந்தேன். யானையின் காது அசைவது போல, தன்னியல்பாக விரிந்து அசைந்து கொண்டிருந்தது இசை. பிரகாரத்தில் யாருமில்லை. நூற்றாண்டுகளாக உறைந்துகிடந்த கற்சிற்பங்களில் கூட நெகிழ்வு கூடி கண்கள் சொருகியிருப்பது போன்று தோன்றியது. நாதஸ்வர இசையென்பது தாழம் பூவின் அடர்மணம் போன்றது. தனியானதொரு சுகந்தம்.
யார் வாசிக்கிறார்கள் என்று எழுந்து போய் பார்க்க தோன்றவில்லை. ஆனால் இசை நின்ற போது கண்ணுக்கு தெரியாத குளிர்ச்சி அந்த மண்டபம் எங்கும் படர்ந்து கொண்டிருப்பதை உணர முடிந்தது.
யாரோ முகம் தெரியாத ஒரு இசைக்கலைஞன் தன் நூற்றாண்டு கால துயரத்தை நாதஸ்வரத்தின் வழியே வழிய விட்டிருக்கிறான்.
அரக்கினை போல பிசுபிசுப்பாக உடலில் ஒட்டுகிறது இசை. என்ன அனுபவமது. உடலின் நரம்புகள் நடுங்க துவங்கியிருந்தன, கைரோமங்கள் குத்தியிட்டு நின்றன.
சிவனின் மீது விழுந்த பிரம்படி ஊரில் இருந்த யாவர் முதுகிலும் விழுந்தது என்ற புராண கதையைப் போன்று கோவிலின் பூஜைக்கு வாசிக்கபட்ட இசை, பிரகாரம் தாண்டி, சிற்பங்கள், தாண்டி கல் மண்டபம் தாண்டி தெப்பம் கடந்து திறந்த காதுள்ள யாவருக்குள்ளும் நிரம்பி வலியும் சந்தோஷமும் ஒருங்கே தருவதாகயிருந்தது.
கிட்டதட்ட அதற்கு நிகரான ஒரு அனுபவத்தை திருவாசகம் கேட்கும் போது உணர்ந்தேன். அதன்பிறகு ஒரு வார காலத்திற்கு வேறு எதையும் கேட்கவில்லை. கேட்க தேவையிருப்பதாகவும் மனம்உணரவில்லை. நல்லிசையின் சுபாவம் அது தானில்லையா.
***
நன்றி எழுத்தாளர்.திரு.எஸ்ரா அவர்கள்
இரண்டு மாதங்களுக்கு முன் ஜானி படத்தில் வரும் காற்றில் எந்தன் கீதம் பாடலை கேட்கத் துவங்கி அன்றிரவு முழுவதும் இளையராஜாவின் பாடல்களாக கேட்டுக் கொண்டிருந்தேன். அது போதாமல் மறுநாள் நண்பர்கள் வசமிருந்த இளையராஜாவின் பாடல்கள் தொகுப்பில் இருந்து 250 பாடல்கள் கொண்ட இரண்டு குறுந்தகடினை வாங்கி வந்து கேட்கத் துவங்கினேன். நாலைந்துநாட்கள் இளையராஜா மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தேன்.ஜானகி, சித்ரா, ஜென்சி, பாலசுப்ரமணியம்,ஜேசுதாஸ், மலேசியா வாசுதேவன், இளையராஜா என்று மாறும் குரல்களும் இசையமைப்பின் வியப்பும் மேலிட இளையராஜாவின் அலுத்துபோகாத மேதமை இன்றும் அதீத உற்சாகம் தருவதாக இருந்தது.
இவ்வளவு திரையிசை பாடல்களை தொடர்ச்சியாக நான் கேட்டதேயில்லை. எப்படியும் நானூறுக்கும் மேற்பட்ட பாடல்கள் கேட்டிருப்பேன்.
இதில் பகல் எல்லாம் பாட்டு கேட்பது, படுக்கையில் கிடந்தபடியே இரவெல்லாம் கேட்பது. விழித்து எழுந்தவுடன் சில மணி நேரம் கேட்பது என்று விருப்பமான மனிதரின் கையை பிடித்துக் கொண்டு சுற்றியலைவது போலகேட்டுக் கொண்டேயிருந்தேன். புத்தகங்கள் திரைப்படங்கள் எதிலும் நாட்டம் திரும்பவேயில்லை.
சிறுவயதில் பல பாடல்களை இசைதட்டில் கேட்கும் போது ஏற்படும் நெருக்கம் திரையில் பார்க்கும் போது ஏற்படாது. அதற்கு மாறாக சில பாடல்களைக் கேட்கும் போது நடிகர் நடிகைகளை மறந்து கேட்க முடிவதேயில்லை. எல்லா ஊர்களிலும் அந்த காலத்தில் ஒரு டி.எம்.எஸ், ஒரு சுசிலா இருந்தார்கள். அவர்கள் சினிமா பாடல்களை அப்படியே அச்சு பிசகாமல் அதே குரலில் பாடி கைதட்டு வாங்குவார்கள்.
என் பள்ளியில் கூட ஒரு சுசிலா படித்தாள். அவளை தமிழ்தாய் வாழ்த்து பாடுவதற்காகவே வைத்திருந்தார்கள். பள்ளிவிழா நாட்களில் அவள் சினிமாபாடல்களை பாடுவாள். அந்த பாடல்களை அத்தனையும் சிறப்பானவை. எப்படி அதை தேர்வு செய்து அந்த பாடல்வரிகளை நினைவில் வைத்திருந்து பாடுகிறாள் என்று வியப்பாக இருக்கும்
அது எம்எஸ்விஸ்வநாதன் காலம். ஒருமுறை எம்.எஸ்வி கச்சேரிக்காக விருதுநகர் வந்திருந்தார். கொட்டும் மழையில் நனைந்து கொண்டே எங்கே நிம்மதி கேட்டோம். அந்த நாட்களில் திரையிசை பாடல்கள் மட்டுமே வெகுமக்களின் பிரதான ரசனையாக இருந்தது. எல்லா வீட்டில் அந்த பாடல்கள் முணுமுணுக்கபட்டன. விசேச நாட்களில் காலை துவங்கி இரவு வரை ரிக்கார்ட் போட்டார்கள்.
அந்த நினைவில் பாடல் என்றாலே உரத்தசப்தத்தில் கேட்க வேண்டும் என்று உள்ளுற பதிந்து போயிருக்கிறது. அதிலிருந்து விடுபடுவதற்கு பல வருசங்கள் ஆகிப்போனது. என் கல்லூரி நாட்களில் நண்பர்கள் இளையராஜாவின் தீவிர ரசிகர்கள். அவருக்காகவே படம் பார்த்தார்கள். அப்போது தான் டூ இன் ஒன் அறிமுகமானது. ஆகவே பாடல்களை ரிக்காடிங் சென்டரில் போய் பதிந்து கொண்டு வந்து கேட்பது என்பது பெரிய விஷயமாக இருந்தது.
உதிரிப்பூக்கள் முள்ளும் மலரும் கிழக்கே போகும் ரயில் புதிய வார்ப்புகள் என்று இளையராஜாவை பற்றி பேசாத நாட்களே இல்லை. அது வளர்ந்து எண்பதுகளின் உச்சத்தை அடைந்த போது நாளைக்கு ஒரு படம் பார்க்கும் ஆளாகியிருந்தேன். ஏதாவது ஒரு படத்தை இரவுக்காட்சி பார்ப்பது என்பது பல வருடமாக எனது வழக்கம். அப்படி படம்பார்த்துவிட்டு திரும்பும் பின்னிரவில் ஆள் அரவம் அற்றுப்போன தெருவில் சைக்கிளை நிறுத்தி சாய்ந்து கொண்டு இளையராஜாவை பற்றி பேசிக் கொண்டிருப்போம்.
எல்லா ஊரிலும் பின்னிரவிற்கு என்றே ஒரு டீக்கடை திறந்திருக்கும். அங்கே நிச்சயம் இளையராஜாவின் பாடல் ஒன்றை போட்டுக் கொண்டிருப்பார்கள்.
ப்ரியா பாடல் வந்த புதிதில் அதை ஒரு நாளைக்கு ஐம்பது தடவை கேட்ட நண்பர்கள் என்னோடு இருந்தார்கள். அது ஒரு மயக்கம். சினிமாவை மீறிய பாடல்களை கேட்கவும் பின்னால் அலையவும் செய்த நாட்கள் அது.
இளையராஜாவின் திருவாசகம் வெளியான நாட்களில் நானும் இயக்குனர் ஜீவாவும் ஒரு நாளிரவு காரில் மகாபலிபுரத்திற்கு சென்றிருந்தோம் வழி முழுவதும் , காரில் திருவாசகம் ஒலித்தபடியே வந்தது. முதன்முறையாக கேட்டபோது அதை மனது ஏற்றுக் கொள்ள மறுத்தது. முக்கிய காரணம் அந்த பாடல்களை ஒதுவார்கள் பாடி கேட்டிருக்கிறேன். அது மனதில் அழியாமல் ஒலித்தபடியே இருந்தது.
ஆனால் அன்றைய இரவில் கடற்கரை அருகில் நல்ல இருளில் மணல்வெளியில் அமர்ந்தபடியே திருவாசகம் கேட்ட போது புற்றில் வாழ் அரவம் வேண்டேன் என்ற வரிகளும் இசையும் மனதை பாரம் போல அழுத்த துவங்கி முன்னறியாத துயரும் விம்மலும் உருவாகியது.
கடலின் மீது தொலைவில் தெரியும் ஆகாசத்தில் நட்சத்திரங்கள் மின்னிக் கொண்டிருந்தன. வீதிகளை , வீடுகளை துயில் கொள்ள செய்திருந்தது இருள் . யாவையும் விழுங்கியபடியே திருவாசகம் மெல்ல ஒரு அலை காலடியில் உள்ள மணலை இழுத்து போவது போல மனதை கொஞ்சம் கொஞ்சமாக தன்வசமாக்கி கொண்டிருந்தது. பரவசமும் தத்தளிப்பும் கூடிய அப்படியான மனநிலை சில தருணங்களிலே தான் ஏற்படுகிறது.
எங்கோ அந்த இருளினுள் புன்னகையுடன் இளையராஜா அமர்ந்திருப்பது போன்ற நெருக்கம் உண்டானது
பால்யவயதிலிருந்து கேட்டிருந்த தேவாரம் திருவாசகம் மனதில் ஏற்படுத்தியிருந்த அத்தனை திரைகளையும் விலக்கி இன்னொரு தளத்தில் திருவாசகம் ஒலிக்கிறது. அது ஆன்மீக அனுபவமல்ல. மாறாக தன்னிருப்பின் சாரத்தை வெளிப்படுத்தும் அற்புதமான தருணம். இசை உயர்கிறது. குரல் ஆழந்த வேதனையை வெளிப்படுத்துகிறது. மனது நிலை கொள்ள மறுத்து நழுவுகிறது. காற்றில் படபடக்கும் ஈரத்துணியின் சில்லிடலைப் போல ஏதோவொரு சில்லிடலை தருகிறது இசை .
இதே போன்ற ஒரு அனுபவத்தை திருச்சுழி கோவிலில் ஒரு முறை அனுபவித்திருக்கிறேன். பிரகாரத்தில் நடந்து வரும் போது எங்கிருந்தோ நாதஸ்வரத்தின் மயக்கும் இசை மிதந்து வந்தது. கல்படியில் அமர்ந்திருந்தேன். யானையின் காது அசைவது போல, தன்னியல்பாக விரிந்து அசைந்து கொண்டிருந்தது இசை. பிரகாரத்தில் யாருமில்லை. நூற்றாண்டுகளாக உறைந்துகிடந்த கற்சிற்பங்களில் கூட நெகிழ்வு கூடி கண்கள் சொருகியிருப்பது போன்று தோன்றியது. நாதஸ்வர இசையென்பது தாழம் பூவின் அடர்மணம் போன்றது. தனியானதொரு சுகந்தம்.
யார் வாசிக்கிறார்கள் என்று எழுந்து போய் பார்க்க தோன்றவில்லை. ஆனால் இசை நின்ற போது கண்ணுக்கு தெரியாத குளிர்ச்சி அந்த மண்டபம் எங்கும் படர்ந்து கொண்டிருப்பதை உணர முடிந்தது.
யாரோ முகம் தெரியாத ஒரு இசைக்கலைஞன் தன் நூற்றாண்டு கால துயரத்தை நாதஸ்வரத்தின் வழியே வழிய விட்டிருக்கிறான்.
அரக்கினை போல பிசுபிசுப்பாக உடலில் ஒட்டுகிறது இசை. என்ன அனுபவமது. உடலின் நரம்புகள் நடுங்க துவங்கியிருந்தன, கைரோமங்கள் குத்தியிட்டு நின்றன.
சிவனின் மீது விழுந்த பிரம்படி ஊரில் இருந்த யாவர் முதுகிலும் விழுந்தது என்ற புராண கதையைப் போன்று கோவிலின் பூஜைக்கு வாசிக்கபட்ட இசை, பிரகாரம் தாண்டி, சிற்பங்கள், தாண்டி கல் மண்டபம் தாண்டி தெப்பம் கடந்து திறந்த காதுள்ள யாவருக்குள்ளும் நிரம்பி வலியும் சந்தோஷமும் ஒருங்கே தருவதாகயிருந்தது.
கிட்டதட்ட அதற்கு நிகரான ஒரு அனுபவத்தை திருவாசகம் கேட்கும் போது உணர்ந்தேன். அதன்பிறகு ஒரு வார காலத்திற்கு வேறு எதையும் கேட்கவில்லை. கேட்க தேவையிருப்பதாகவும் மனம்உணரவில்லை. நல்லிசையின் சுபாவம் அது தானில்லையா.
***
நன்றி எழுத்தாளர்.திரு.எஸ்ரா அவர்கள்
வியாழன், 6 மே, 2010
இசைஞானியின் மகத்தான ஐந்து அரை சதங்கள்
-->
இசைஞானியின்
மகத்தான ஐந்து அரைசதங்கள்
இந்த சாதனை தான் யாராலும் தான் முறியடிக்கவோ அல்லது முயன்றுபார்க்கவோ தான் முடியுமா? எத்தனை
படங்களுக்கு கதை கேட்டிருக்கவேண்டும்?
எத்தனை ட்யூன்கள் போட்டு தயாரிப்பாளர்,இயக்குனர் சம்மதம் வாங்கியிருக்கவேண்டும்?
எத்தனை எத்தனை பாடலாசிரியரிடம் டிஸ்கஸ் செய்திருக்கவேண்டும்?சரிவராத போது தர்க்கம் செய்து வரிகளை மாற்றி அமைத்திருக்க வேண்டும்,
எத்தனை மகானுபாவர்களின் இசையை கேட்டு பாடம் படித்து தன்னை புடம் போட்டிருக்க வேண்டும்? இதற்கெல்லாம் மேலே இந்த போட்டி மிகுந்த துறையில் தொடர்ந்து இயங்க எத்தனை கற்பனை வளம்
இருந்திருக்க வேண்டும்?
தன்னையும் அறியாமல் எத்தனை புதிய தயாரிப்பாளரை,புதிய இயக்குனரை இசைஞானி உருவாக்கியிருக்கிறார் பாருங்கள், இன்றைய தொழிற்நுட்பம் கோலோச்சும் உலகில் இந்த
வேகத்தில் அதாவது 6 நாட்களில் ஒரு படத்தின் பாடல்கள் ,பிண்ணனி இசை உருவாக்கம் செய்தால் உலகத்தரம் கிடைக்குமா? எங்கேனும் நடக்குமா? எவ்வளவு கோஆர்டினேஷன்?.
எவ்வளவு பெர்ஃபெக்ஷன்.எவ்வளவு தியாகங்கள்? சொந்தகுரலில் எவ்வளவு பாடல் பாடியிருப்பார்? எவ்வளவு இறைப்பணி?எவ்வளவு சினிமா சார்ந்த,இசை சார்ந்த குடும்பங்கள் பிழைத்திருக்கும்?
கடவுளே!!! சான்சே இல்ல. அமெரிக்க,ஐரோப்பிய இசை மேதைகள் என்னியோ மார்ரிக்கோன், ஜேம்ஸ் ஹார்னர்,மற்றும் பலர் ஆண்டாண்டாக செய்யாததை தென்னாட்டில் பிறந்த ராசையா சொற்ப காலத்தில் செய்தார் என்றால் மிகையல்ல.இவரால் தான் ஒரு விருதுக்கே பெருமை இருக்க முடியும்.
அருகில் இருக்கும் போது ஒரு பொக்கிஷத்தின் மதிப்பு தெரிவதில்லை. இன்னும் தோண்ட தோண்ட என்ன? என்ன? சாதனைகள் கிடைக்குமோ?
அவருடைய சோகப் பாடல்கள்,தத்துவப் பாடல்கள் காதலில் தோல்வியுற்ற,அன்னையை இழந்த,மனைவியை இழந்த,உறவுகளை இழந்த எத்தனை பேரின் மன வேதனையை தீர்திருக்கும்.மனிதனின் ஒவ்வொரு நிலைக்கும் இசையமைத்து இருக்கிறார்.சந்தோஷம் ,துக்கம், தாலாட்டு ,தனிபாட்டு,உழைப்பு,உயர்வு,வெற்றி ,தோல்வி,பாசம், நேசம்,தேசம், நீதி,ஜாதி,மடமை,கடமை என மனிதனின் வாழ்க்கைக்குள் சென்று ஊடுருவி உயிரோடு கலந்தது அவர் இசை என்றால் மிகை அல்ல.
இவற்றை வெறுத்து ஒருவர் பரதேசம் போகவும் அவர் இசை வைத்தார்,அது தான் குரு ரமணகீதம்,ராஜாவின் ரமணமாலை போன்றன.
பெரியோரை தூற்றும் முன் அந்த தூற்றுதலுக்கு நமக்கு தகுதி இருக்கிறதா என பாருங்கள்.

அவர் கோலோச்சிய போது அவருக்கு போட்டியே இல்லை என்று எப்படி மனசாட்சியேயின்றி ஒருவரால் சொல்லமுடியும்? இசைஞானிக்கு முன்பாகவே சங்கர் கணேஷ் திரைக்கு வந்து வெற்றிகரமாக பல படங்கள் இசையமைத்தார்,ஒவ்வொரு இசைஞானி படத்தின் பாடல் வெளியான பின்பும் அதே பாடலை பின்பற்றி அவர் இசை அமைத்து ஹிட்கள் கொடுத்துக்கொண்டுதான் இருந்தார்.
இசைஞானியை விட வயதில் மூத்தவரான சந்திரபோஸ் இசைஞானி தொடர்ந்து தீவிரமாக உச்சத்தில் இருந்த போதும் கைவசம் நிறைய படங்கள் வைத்திருந்து நிலைத்து நின்றிருக்கிறார்,அவரும் இசைஞானியின் ஆதார இசையமைக்கும் பாணியை பின்பற்றியே சினிமாவில் நிலைத்து நின்றார் என்றால் மிகையில்லை,இதற்கு முக்கிய உதாரணமாக அண்ணாநகர் முதல் தெரு திரைப்படத்தைச் சொல்லலாம்.
அப்போது 90களின் ஆரம்பத்தில் தேனிசைத் தென்றல் தேவாவும் திரை இசைக்கு வந்து தீவிரமாக இயங்க ஆரம்பித்து விட்டார், பின்னர் அவ்வப்பொழுது தமிழ் சினிமாவில் தலைகாட்டிவிட்டுச் செல்லும் அம்சலேகா,ஆபாவாணன் படங்களில் தொடர்ந்து இயங்கிய மனோஜ் கியான் இரட்டையர்கள்,பப்பி லஹரி,இசைஞானியின் இசையை நிழலாய் பின் தொடர்ந்து மகத்தான சாதனைகள் பல புரிந்த மலையாள சினிமாவின் 30 கும் மேற்பட்ட இசையமைப்பாளர்களில் முக்கியமானவரான ரவீந்திரன் மாஸ்டர் தமிழுக்கு வந்து செய்த உன்னதமான பல முயற்சிகள் எல்லாம் இசைஞானிக்கு போட்டியாக இல்லையா?!!!
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)