இசைஞானி பற்றி சில சுவையான குறிப்புகள்

இசைஞானி பற்றி சில சுவையான குறிப்புகள்
இளையராஜா (ஆங்கிலம்: Ilaiyaraajaa) (பி. ஜூன் 2, 1943; இயற்பெயர்: ராசய்யா), இந்தியாவின் தலைசிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களுள் ஒருவரான இவர் இசைத்துறையில் மிகவும் புலமை பெற்றவராக திகழ்கிறார். அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததின் மூலம் 1976 இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதுவரை 950 க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவருக்கு இந்திய அரசின் படைத்துறை-சாரா விருதுகளில் மூன்றாவது உயரிய விருதான பத்ம பூசண் விருது 2010-ஆம் ஆண்டு அளிக்கப்பட்டு கௌரவப்படுத்தப்பட்டது. தமிழக நாட்டுப்புற இசை, கருநாடக இசை மற்றும் மேற்கத்திய இசையில் புலமையும் முறையான பயிற்சியும் பெற்றவர். சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை நான்கு முறை பெற்றுள்ளார். திரைப்படங்களுக்கான சிறந்த பிண்ணனி இசையமைப்புக்கும் பெயர் பெற்றவர்.

வியாழன், 12 ஆகஸ்ட், 2010

மீண்டும் இசைஞானியின் கிராமிய விருந்து!!! அழகர்சாமியின் குதிரை

வுதம் மேனன் தயாரிக்கும் புதிய படத்துக்கு இசையமைக்கிறார் இளையராஜா. இசைஞானியும் கவுதம் மேனனும் இணைவது இதுவே முதல் முறை.

பல முறை தன்னை இளையராஜாவின் ரசிகன் என்று கூறி வந்தார் கவுதம் மேனன். ஆனால் அவர் இதுவரை ஒரு படத்திலும் அவருடன் இணைந்து பணியாற்றியதில்லை. இந்த நிலையில் கவுதம் மேனனின் சொந்தப் பட நிறுவனமான ஃபோட்டான் ஃபேக்டரி 'அழகர்சாமியின் குதிரை' என்ற படத்தைத் தயாரிக்கிறது. வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல படங்களை இயக்கிய சுசீந்திரன் இந்தப் படத்தை இயக்குகிறார்.
இந்தப் படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். முழுக்க முழுக்க கிராமத்துப் பின்னணியில் எடுக்கப்படும் படம் இது. படத்தின் ஒரு முக்கிய பாத்திரமாகவே இசை பயணிப்பதால், இதற்கு இளையராஜா இசையமைக்க வேண்டும் என கவுதம் மேனன் கேட்டுக் கொள்ள, இசைஞானியும் சம்மதித்துள்ளார். இதன்மூலம் இளையராஜா-கவுதம் மேனன்-சுசீந்திரன் என புதுக்கூட்டணி உருவாகியுள்ளது.

பாஸ்கர்சக்தி எழுதிய நாவலைத்தான் அழகர்சாமியின் குதிரை என படமாக எடுக்கிறார்கள். வெண்ணிலா கபடிக் குழுவில் நாயகியாக நடித்த சரண்யா மோகன்தான் இதிலும் நாயகி. அந்தப் படத்தில் கபடி விளையாட்டி வீரராக நடித்த இளைஞரை முதல் முறையாக ஹீரோவாக்கியுள்ளார் சுசீந்திரன்.

நிகில் முருகன் மக்கள் தொடர்பாளராகப் பணியாற்றுகிறார்.
நல்ல செய்திக்கு நன்றி:-தட்ஸ்தமிழ்

1 comments:

சாமக்கோடங்கி சொன்னது…

அஹா...என்ன ஒரு அருமையான தகவல்.. தொகுத்து அளித்தமைக்கு நன்றி.. பத்தி பிரித்து எழுதி இருந்தால் படிக்க கொஞ்சம் வசதியாக இருந்திருக்கும்.. ஒரே மூச்சில் வாசிக்க வேண்டி இருந்தது...

இசை ஞானி பிறந்த ஊரில் நானும் பிறந்து இருக்கிறேன் என்று நினைக்கும்போது பெருமையாக உள்ளது..

கருத்துரையிடுக

வலை நண்பர்களே சான்றோர்களே சொன்னது பிடித்தால் ஓட்டு & கருத்து போட்டு ஊக்கம் கொடுங்கள்.

Blog Widget by LinkWithin
Phonetic
Tamil Typewritter
Tamil 99