This feature is powered by Dishant.com - Home of Indian Music |
-----------------------------------------------
குரு ரமண கீதம் தொகுப்பிலிருந்து இசைஞானியின் எழுத்தில்,இசையில்,மனதை உருக்கும் சாந்தக் குரலில் இப்பாடல்.. இதில் நமக்கு இசைஞானி ரமணர் பால் ஈர்க்கப்பட்டதையும்,அவரின் தேஜஸை,கருணை விழிகளை,அவர் அமர்ந்த இடத்தை,மிதித்த மண்ணை,அவரின் கருணை உள்ளத்தை போற்றி ,இசைஞானி மனமுருக பாடுகையில் நமக்கு மெய்சிலிர்த்து,கண்ணீர் பொங்குகின்றது...ஆனந்த கூத்தாடியிருக்கிறார் நம் ராசையா.
------------------------------------------------------------
4.என்னை கவர்ந்திழுத்த ரமணன்
என்னை கவர்ந்திழுத்த ரமணன் இங்கே தான் இருந்தான்..
என்னை கவர்ந்திழுத்த ரமணன் இங்கே தான் இருந்தான்..
பொன்னை பழிக்கும் மேனியடி...ஈ ஈ
பொன்னை பழிக்கும் மேனியடி மிண்ணை ஒளிர்க்கும் விழிகளடி.
மகேசன் அவனே மனித உடல் தாங்கி மண்ணில் வந்து. கண்கள் கொண்டு... என்னை...ய்ய்...என்னை...ய்ய்
என்னை கவர்ந்திழுத்த ரமணன் இங்கே தான் இருந்தான்..
அமர்ந்த இடத்தைப் பார்க்கையிலே..
அமைதி அலை வந்து பாய்கிறதே
அவன் அமர்ந்த இடத்தைப் பார்க்கையிலே..
அமைதி அலை வந்து பாய்கிறதே நடந்த நிலத்தில் நடக்கையிலே..
நகராது மன அலை ஓய்கிறதே ..
மொழிந்த நல்வாசகம் படிக்கையிலே..
மோனம் இதுவென்று விளங்கிடுதே..
அழியினும் ஒழியாப் பிறப்பினுக்கே அழியா நிலையளித்த அருள் தந்து ஆட்கொண்டு..
என்னை...ய்ய்....என்னை...ய்ய்
என்னை கவர்ந்திழுத்த ரமணன் இங்கே தான் இருந்தான்..
விருப்பு வெறுப்பற்று வீற்றிருந்த நல் விருபாட்ச குகை கண்டாயோ?
விருப்பு வெறுப்பற்று வீற்றிருந்த நல் விருபாட்ச குகை கண்டாயோ?
விரும்பி நெருங்கிவிடில் வேதம் விளங்குகின்ற பெரிதிருந்த நிலை அறிந்தாயோ?
கையில் ஏதுமற்ற கந்தன் தந்த காணிக்கை ஸ்கந்தாஸ்ரமம் கண்டாயோ?
மெய்பரம் பொருள் மலையோடிணைந்தது பொய்யறுத்து போக்கறுத்து வேறெங்கும் போகவிடாதென்னை...
என்னை...ய்ய்
என்னை கவர்ந்திழுத்த ரமணன் இங்கே தான் இருந்தான்..
சிறு பருவத்தில் தவமுனியான ஒருவரையும் நான் கண்டதில்லை...
அருந்தவ வாழ்வில் அருட்சோதியாகி அருணை கலந்ததையும் கேட்டதில்லை.
காக்கைக்கும் மயிலுக்கும் மோட்சம் அளித்த கருணைக் கரங்களே எங்கும் இல்லை..
இந்த யாக்கைக்குள் நுழைந்ததன் போக்கினை மாற்றிவைத்து காத்து நிற்க்கும் தாள் தந்து
என்னை...ய்ய்...என்னை...ய்ய்
என்னை கவர்ந்திழுத்த ரமணன் இங்கே தான் இருந்தான்..
பொன்னை பழிக்கும் மேனியடி...ஈ ஈ
பொன்னை பழிக்கும் மேனியடி மிண்ணை ஒளிர்க்கும் விழிகளடி.
மகேசன் அவனே மனித உடல் தாங்கி மண்ணில் வந்து.
கண்கள் கொண்டு என்னை கவர்ந்திழுத்த ரமணன் எங்கும் உறைகின்றான்.
4.ennai kavarndhizhuththa ramaNan song in english:-
ennai kavarndhizhuththa ramaNan
ingae thaan irundhaan..
ennai kavarndhizhuththa ramaNan
ingae thaan irundhaan..
ponnai pazhikkum maeniyadi...ee ee
ponnai pazhikkum maeniyadi
miNNai oLirkkum vizhigaLadi.
magaesan avanae manidha udal thaangi maNNil vandhu.
kaNgaL kondu...
ennai...yy...ennai...yy
ennai kavarndhizhuththa ramaNan
ingae thaan irundhaan..
amarndha idaththaip paarkkaiyilae..
amaithi alai vandhu paaigiRathae
avan amarndha idaththaip paarkkaiyilae..
amaithi alai vandhu paaigiRathae
nadandha nilaththil nadakkaiyilae..
nagaraathu mana alai oaigiRathae
mozhindha nalvaasagam padikkaiyilae..
moanam idhuvendru viLangidudhae..
azhiyinum ozhiyaap piRappinukkae
azhiyaa nilaiyaLiththa aruL thandhu aatkondu..
ennai...yy....ennai...yy
ennai kavarndhizhuththa ramaNan
ingae thaan irundhaan..
viruppu veRuppaRRu veeRRirundha
nal virubaatcha kugai kandaayoa?
viruppu veRuppaRRu veeRRirundha
nal virubaatcha kugai kandaayoa?
virumbi nerungividil vaedham viLangugindra
peridhirundha nilai aRindhaayoe?
kaiyil aethumaRRa kandhan thandha kaaNikkai
SkandhaaSramam kandaayoe?
meiparam poruL malaiyoadiNaindhadhu
poyyaRuththu poakkaRuththu vaeRengum poagavidaadhennai...
ennai...yy
ennai kavarndhizhuththa ramaNan
ingae thaan irundhaan..
siRu paruvaththil thavamuniyaana
oruvaraiyum naan kandathillai...
arundhava vaazhvil arutchoathiyaagi
aruNai kalandhadhaiyum kaettadhillai.
kaakkaikkum mayilukkum moatcham aLiththa
karuNaik karangaLae engum illai..
indha yaakkaikkuL nuzhaindhadhan poakkinai maaRRivaiththu
kaaththu niRkkum thaaL thandhu
ennai...yy...ennai...yy
ennai kavarndhizhuththa ramaNan
ingae thaan irundhaan..
ponnai pazhikkum maeniyadi...ee ee
ponnai pazhikkum maeniyadi
miNNai oLirkkum vizhigaLadi.
magaesan avanae manidha udal thaangi maNNil vandhu.
kaNgaL kondu ennai kavarndhizhuththa ramaNan
engum uRaiginRaan.
--------------------------------
Track 4
Ennai Kavarnthizuttha Ramana (Why Ramana?) Ilaiyaraja invokes Ramanas palpable presence in Arunachala, and justifies his feeling of devotion for the sage. Not only is he drawn by those electrifying eyes, bt finds peace by simply gazing upon the spot where Ramana sat, or by walking the trail that the saint walked . Reflecting upon the spiritual growth attained by the sage of Arunchala, Ilaiyaraja concludes that Ramana is peerless.
பாடலை தரவிறக்க:-
1 comments:
அருமை.... அண்ணாமலையார் மேல் அன்பு கொண்டு பாடலும் என்னை கவர்ந்தது. வரிகள் பதிவிடவும். நன்றி.
கருத்துரையிடுக
வலை நண்பர்களே சான்றோர்களே சொன்னது பிடித்தால் ஓட்டு & கருத்து போட்டு ஊக்கம் கொடுங்கள்.