இசைஞானி பற்றி சில சுவையான குறிப்புகள்

இசைஞானி பற்றி சில சுவையான குறிப்புகள்
இளையராஜா (ஆங்கிலம்: Ilaiyaraajaa) (பி. ஜூன் 2, 1943; இயற்பெயர்: ராசய்யா), இந்தியாவின் தலைசிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களுள் ஒருவரான இவர் இசைத்துறையில் மிகவும் புலமை பெற்றவராக திகழ்கிறார். அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததின் மூலம் 1976 இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதுவரை 950 க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவருக்கு இந்திய அரசின் படைத்துறை-சாரா விருதுகளில் மூன்றாவது உயரிய விருதான பத்ம பூசண் விருது 2010-ஆம் ஆண்டு அளிக்கப்பட்டு கௌரவப்படுத்தப்பட்டது. தமிழக நாட்டுப்புற இசை, கருநாடக இசை மற்றும் மேற்கத்திய இசையில் புலமையும் முறையான பயிற்சியும் பெற்றவர். சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை நான்கு முறை பெற்றுள்ளார். திரைப்படங்களுக்கான சிறந்த பிண்ணனி இசையமைப்புக்கும் பெயர் பெற்றவர்.

வியாழன், 1 அக்டோபர், 2009

திருப்புகழ் முத்தைத் தருவை மெருகேற்றிப் பாடிய இசைஞானி



இந்த அற்புத காணொளியை யூட்யூபில் தரவேற்றிய அன்பருக்கும்,அதை வழங்கிய யூட்யூபுக்கும் நன்றி

3 comments:

கோபிநாத் சொன்னது…

பகிர்வுக்கு நன்றி தல ;)

ராசாவின் மலையாளத்தில் புது படத்தோட பாடல்கள் கேட்டிங்களா!

படம் - Pazhassi Raja

அட்டகாசம் எல்லாமே ;)

கிருஷ்ண மூர்த்தி S சொன்னது…

இங்கே இளையராஜா மெட்டு மாற்றிப் பாடியிருப்பது அருணகிரிநாதரின் திருப்புகழ்!
திருமுருகாற்றுப்படை சங்க காலத்தைய பாடல். வசனம் போலத் தான் படிக்க முடியும், மெட்டமைக்க முடியாது. நக்கீரன் இயற்றியது.
வீடியோவின் தலைப்பிலேயே முத்தைத் தரு என்ற பாட்டை மேட்டை மாற்றி என்று ஆங்கிலத்தில் தலைப்புக் கொடுத்திருக்கிறார்களே, கவனிக்கவில்லையா?

இளையராஜாவைத் தெரிந்துகொள்ள எடுத்துக் கொண்ட ஆர்வத்தில் ஒரு சிறுபகுதியையேனும், திருப்புகழிலும், திருமுருகாற்றுப்படையைத் தெரிந்துகொள்வதிலும் எடுத்துக் கொள்ளுங்கள்.

geethappriyan சொன்னது…

ஐயா தவறை சுட்டிக்காட்டியமைக்கு மிக்க நன்றி ,அவசியம் மாற்றியும்
விடுகிறேன், கண்டிப்பாக திருப்புகழையும்,திருமுருகாற்றுப்படையையும்
தேடிப் படிக்கிறேன்.உங்கள் மூலமாக அந்த முருகனே வந்து எனக்கு படிக்க
சொல்லுவதாக கருதுகிறேன்,வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா

கருத்துரையிடுக

வலை நண்பர்களே சான்றோர்களே சொன்னது பிடித்தால் ஓட்டு & கருத்து போட்டு ஊக்கம் கொடுங்கள்.

Blog Widget by LinkWithin
Phonetic
Tamil Typewritter
Tamil 99