திருப்புமுனை படத்தில் வந்த அம்மான்னா சும்மா இல்லடா பாடல்
அம்மா இருப்பவர்களுக்கு அருமையையும்,இல்லாதவருக்கு அவரின் நினைவையும் மீட்டு கொடுக்கும் பொக்கிஷம்
--------------------------------------------------------------------
கழுகு படத்தில் வந்த பொன்னோவியம் கண்டேனம்மா பாடல்.
இது ஆனந்தக் களி.
--------------------------------------------------------------------------
கல்லுக்குள் ஈரம் படத்தில் வந்த சிறு பொன்மனி அசையும் பாடல்.
என்ன ஒரு இசை விருந்தும் , வார்த்தை ஜாலமும்?
--------------------------------------------------------------------------
ஆட்டோ ராஜா படத்தில் வந்த சங்கத்தில் பாடாத கவிதை பாடல்
இது காணக்கிடைகாத மாற்றுக்குறையாத தங்கம்.
--------------------------------------------------------------------------
அலைகள் ஓய்வதில்லை படத்தில் வந்த வாடி என் கப்பகிழங்கே பாடல்
ராஜா சாரின் கிண்டல் தொனியை இதில் நன்கு உணரமுடியும்.ஆள் படு
கலகல பேர்வழி.மாற்றங்கள் மனிதருக்கு இயல்புதானே?
---------------------------------------------------------------------------
கரகாட்டக்காரன் படத்தில் வந்த இந்தமான் உந்தன் சொந்தமான் பாடல்
என்ன ஒரு காந்தக் குரல் கேட்பவரை இதமாய் வருடி தூங்கவைக்கும்.எப்பேர் பட்ட கஷ்டத்திலும் இதை கேளுங்கள்.ஒரு நொடியில் உற்சாகம் பிறக்கும்.மந்திர இசை
---------------------------------------------------------------------------
வண்ண வண்ண பூக்கள் படத்தில் வந்த கண்ணம்மா காதலெனும் கவிதை சொல்லடி,ஆல் டைம் ஃபேவரிட்,மயக்கும் இசை,எப்போதும் அலுக்காத ஒன்று.
----------------------------------------------------------------------------
தாலாட்டு கேக்குதம்மா படத்தில் வந்த அம்மா என்னும் வார்த்தை தான் பாடல், பெண்மையை போற்றும் பாடல்
-------------------------------------------------------------------
பரதன் படத்தில் வந்த புன்னகையில் மின்சாரம் ,கலக்கல் பாட்டு
வர்ணிக்க வார்த்தை இல்லை.
பார்த்து விட்டீர்களா? – 10 விழியங்கள்
3 நாட்கள் முன்பு